Posted by mahendhiran மேல் December 5, 2007
தலைப்பை பார்த்து எதோ பலான பாலான மேட்டரோ என்று நினைக்க வேண்டாம், எஸ்ஜேசூர்யா என்றால் பாக்கியராஜ் மாதிரி பச்சை தமிழன் டிரேட் மார்க் பெயராக மாறிவிட்டது.
இது அதுவல்ல, தமிழ்மணத்தில் திடிரென்று குட்டீஸ் பதிவுகள் பட்டையை கிளப்புது, பின்னனியை ஆராய்ந்து பார்த்தால் பல வயதுவந்த பதிவர்கள் (ADULT BLOGGERS) தான் தங்கள் குழந்தைகள் மற்றும் சொந்தக்காரர் குழந்தைகளின் பெயரில் நியூ படத்தின் எஸ்ஜே சூர்யா சிறுவனாக மாறியது போல் மாறி இருக்கிறார்கள்.
குழந்தைகளாவது எழுதுவதாவது. எல்லாமே காண்வெண்ட் படிக்கும் குழந்தைகளாக ஆகிவிட்டன, அப்பறம் எங்கே தமிழை தகராறு இல்லாமல் எழுதுவது? இந்த பூனைகள் எல்லமும் ‘மியாவ்’ என்று பெரிய சத்தமாக கத்தும் பெரிய பூனைகள் தான். பதிவர்களே உசார். உசார்… யாரையாவது ஆண்டி, அங்கிள் என்று சொல்லிப் பார்க்க புது உத்தியாக தெரிகிறது. இதுல நமஸ்டோன் மற்றும் இம்சை மற்றும் சில பெண் பதிவர்களும் சிறுவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரியவங்க சின்னவங்களானது நல்ல விசயம் தான், மழலைகள் போல் கள்ளம் கபடம் இன்றி எழுதினால் சரி. பெரிய குட்டீஸ்களா !!! வாழ்த்துக்கள் !
அமுக
சிங்கப்பூர் கிளை
.... இங்கே பதியப்பட்டது கும்மி | 9 மறுமொழிகள் »
Posted by mahendhiran மேல் December 3, 2007
மலேசியாவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதை கண்டித்து உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அதை தொடர்ந்து மலேசிய அமைச்சர் முட்டாள் தனமான அறிக்கை வெளியிட்டிருப்பதும் எல்லோரும் அறிந்தது தான். இத்தகைய பக்குவம் இல்லாத அறிக்கை மூலம் மலேசியா தன் இரட்டை வேடத்தை காட்டியுள்ளது
மலேசியாவில் மலாய் இனத்தவர் அதிகம் சீனர்கள் சிறுபாண்மை அதே நேரம் சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பாண்மையாகவும் மலாய் இனத்தவர் சிறுபாண்மையாக இருக்கிறார்கள். சிங்கப்பூரில் சிறுபாண்மையாக உள்ள மலாய் இனத்தவருக்கு சீனர்களுக்கு இணையான இடம் கொடுப்பது இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க மலேசிய ஊடகங்கள் பெரும் சிரத்தை எடுத்து வருகின்றன. ஆனால் இந்த பிரச்சாரத்திற்கு மலாய் மக்கள் மலேசியாவில் இருப்பதை விட சிங்கப்பூரில் நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள் என்ற பதில் சிங்கப்பூர் தரப்பில் இருந்து கொடுக்கப்படும். இப்படி பலமுறை மூக்கு உடைபட்டாலும் தொடர்ந்து சிங்கப்பூருக்கு எதிராரன பிரச்சாரத்தை மலேசிய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மலேசியர்களை பற்றி கவலைப்படாமல் சிங்கப்பூரர்களை பற்றி போலியாக கவலைப்பட்டு வருகிறார்கள்
இப்போது தமிழர் பிரச்சினை பற்றி உலகத் தமிழர்களின் தலைவர் அறிக்கைவிட்டது மட்டும் அவர்களுக்கு உள்நாட்டு பிரச்சினையாகிவிட்டது. மலேசியப் பிரச்சினை பற்றி அவர்கள் பார்த்துக் கொள்வார்களாம் ஆனால் சிங்கப்பூர் பிரச்சினைகளில் தலையிடுவார்களாம். இவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை பற்றி அமெரிக்கா அறிக்கைவிடும் அளவிற்கு வந்துவிட்ட பிறகும் அதை உள்நாட்டுப் பிரச்சினை என்று திசை திருப்புவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இந்த பிரச்சினையில் அனைவரும் உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் அவர்கள் பின்னால் அணிவகுத்து தமிழர் துயர் துடைக்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
.... இங்கே பதியப்பட்டது தமிழர் | Leave a Comment »
Posted by mahendhiran மேல் December 2, 2007
நெல்லையில் நடைபெறும் கழக இளைஞர் அணி மாநில மாநாட்டினையொட்டி இளைஞர் அணியினர்க்கு கலைஞர் வழங்கும் புதிய ஆத்திச்சூடி:-
அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம், உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறு போல் வீறு கொள்!
ஐயம் களைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!
கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!
நன்றி முரசொலி
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
Posted by mahendhiran மேல் நவம்பர் 26, 2007
டாலர் ஆடிய ஆட்டமும் பாட்டமும் அடங்கிவிட்டது போல் தெரிகிறது. முன்பெல்லாம் டாலருக்கு மதிப்பு இருந்தது போன்ற தோற்றம் இருந்தது, ‘அமெரிக்க’ டாலர் என்றால் பலரும் அதன் ஓட்டத்தை வைத்து வியந்தனர். இப்பொழுது ஈரோ / வளைகுடா டாலர் களுக்குத்தான் மதிப்பாம். தாறுமாறான கொள்கைகள், தவறான கூட்டு தொழில் ஆகியவற்றால் டாலர் வீழ்ச்சியுற்றிருக்க வேண்டும் என்று பார்த்தவர்களூம், படித்தவர்களும் நிலைமை இப்படி மோசமாகிவிட்டதே என்று ‘உச்’ கொட்டி சொல்கிறார்கள்.
அமுக,
கிளைக் கழகம் (புது டெல்லி)
பின்குறிப்பு : டாலர் என்பது அமெரிக்க டாலர்தான், பதிவர் யாரையும் குறிப்பிடவில்லை.
.... இங்கே பதியப்பட்டது மொக்கை | 2 மறுமொழிகள் »
Posted by mahendhiran மேல் நவம்பர் 25, 2007

அவர்கள் சிவப்பு ஆடைகளை
அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான்
கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில்
நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,
கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ்
நாயின் கழுத்தில் போடப்படும்
வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும்
விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும்
கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும்
அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள்,
அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும்
இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு
வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து
கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும்
காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள்
என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு,
உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத்
தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில்
எல்லா இடங்களிலும் அவள்
விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில்
அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை
நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில்
நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள்
சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக
விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச்
சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில்
சில தடவைகள் வந்து
வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப்
பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
-தஸ்லிமா நஸ்ரின்
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
Posted by mahendhiran மேல் நவம்பர் 24, 2007
உரோமக் கண்களுடனான
மெய் சிலிர்த்ததில் நான்
வாழையின் நிழல் நடனம்
என் விரல்களில் குருதி பார்க்க
பற்களை நீட்டியபடி நண்டுகள்…
அலைகளின் வால் முடிச்சுக்களை
கரைகளின் துணிக்கை இடை வெளிகளுடன்
பின்னிக் கொண்டிருக்கின்றன
சோதரனே!
உன் உணர்வுகள் பொய்மையூட்டப்பட்டு
உய்த்தலில், உடல்களின்
கலங்களின் வேண்டுதல்களில்
ஒவ்வொரு(கு)புகையையும் உறிஞ்சி
நீ வாழ்…
அது பொய் – அவள் சொல்வது
என் கவிதைகளின் புரியாமை பற்றி
பேனைக் குருதியின் ஒவ்வொரு செல்களிலும்
என் அங்கங்களை தோயவிட்டு
கருக்கூட்டப் பார்க்கிறேன்…
என் எண்ணங்கள் மதர்த்து
கவிதைகளின் கழுத்துக்களை
கொல்ல…இல்லை — பாவமவை
என்னை துரோகித்து விட்டதாக
நீயும் அவளும்….
நான்: மீண்டெழ ஒற்றை வால்ப் பறவை
கூவியழைத்து விரலிடுக்குகளில்
உயிர் பற்றி
தூக்கிப் பறக்க
உன் எதிரொளி என்னவாகும்?
கல்லெறிவாயா
எனை ஊசிக்குளிரில்
நிர்வாணப் படுத்தி
கொட்டுப் பூச்சிகளை மேயவிடுவாயா?
அல்லது
நீயே என்னை மிருகித்து விடுவாயா?
பிணத்துடனான புணர்தல் – உனை
பூரணப்படுத்தாத
நிர்வாணப்படுக்கையே….
-சலனி(இலங்கை)
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
Posted by mahendhiran மேல் நவம்பர் 24, 2007
இன்று பினாங்கில் சிங்கை மற்றும் மலேசிய பதிவர்கள் குழப்பமான திராவிட பதிவரான அரவிந்தன் இல்லத்தில் ஒரு மாபெரும் வலையுலக மாநாட்டை தொடங்கி உள்ளதாக அதி முக்கிய இடத்தில் இருந்து செய்தி வந்துள்ளது . இதில் பாரி.அரசு, ஜெகதீசன், கோவி.கண்ணன் மற்றும் TBCD ஆகியோரும் இன்னும் பெயர் சொல்ல விரும்பாத எதிர்கால சூப்பர் ஸ்டார் வலைப்பதிவாயினி ஒருவரும் கலந்துகொள்வதாக அங்கிருந்து வரும் ரகசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
வால் துண்டு :
(அதாம்பா டெய்ல் பீஸ்
சிங்கையில் இருந்து பினாங்குக்கு பஸ்ஸில் ஏறிய சிங்கை பதிவர்களை பஸ்காரன் ஏமாற்றி கோலாலம்பூரிலேயே இறக்கி விட்டு விட்டதால் விழா நாயகர்கள் லேட்டாகத்தான் கலந்துகொள்ள முடிந்ததாம்
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 6 மறுமொழிகள் »
Posted by mahendhiran மேல் நவம்பர் 23, 2007
நிச்சயிக்கப்பட்ட பயணத்திலெல்லாம்
அவ்வீட்டை கடந்து செல்கிறேன்
காய்ந்த முற்றத்தில் காகிதப்பூக்கள்
கொட்டிக் கிடக்கின்றன.
தென்னையின் உலர்ந்த இலையொன்று
தரைதொட்டு அசைந்தாடுகிறது
நீரறியா தொட்டிகளில்
கழுவேறுகின்றன இரண்டு மலர் செடிகள்
கனத்தப் பூட்டினை இறுக்க்கியபடி
மூச்சற்று நிற்கிறது கதவு
மருந்திடாத காயத்தைப் போல்
புரையோடி யிருக்கின்றன சன்னல்கள்
தளர்ந்த கொடிகம்பியில்
உள்ளாடையின் சாயலோடு
துணியொன்று ஆடிக்கொண்டிருக்கிறது
அமர நிழலற்ற தவிட்டுக்குருவிகள்
இடவலமாய் பறந்து செல்கின்றன
ஒருநாள்
கதவு திறந்திருக்க
வெட்டப் பட்டிருக்கின்றன
காகிதப்பூ செடிகள்
பின்
பயணம் வாய்க்கவில்லை அவ்வழியே.
-சுகிர்தராணி
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »
Posted by mahendhiran மேல் நவம்பர் 21, 2007
ஊர்வன சுமந்துசெல்லும் மண்ணாங்கட்டிகளைப்போல
உருட்டிப்புரட்டிக்கொண்டும்
பலசமயங்களில் தரையோடு அழுத்தும் சுமைகளில்
இழுபட்டுக்கொண்டும்
என்னுள் கிளர்ந்தெழுந்து உன்னை வந்துசேர்ந்துகொண்டேயிருக்கிற
நுரைக்கும் வாசகங்கள்
அதீதக் காமம் பொதிந்த சொற்களையும்
வெறுமையின் கதவுகளைச் சிதைக்கும் உத்திகளையும்
நீ தரமறுக்கும் உணர்வின் பேதலிப்புகளைக் கோரியும்
பிரித்துப்பார்க்கத் துணியாமல் நீ மூலைகளில் விசிறும்போதுகூட
அவை உயிர்கொண்டு முனகுவதில்லை
கல்லறைக்குள் போய் இறங்கியதைப்போல்
சொற்கள் கண்திறந்தவண்ணம்
வண்ணத்துப்பூச்சிகைளத் தேனருந்த அழைத்தவண்ணம்
பிறந்துகொண்டேயிருக்கின்றன
பாலுணர்ச்சி விழித்துக்கொண்ட சொற்களை
அடைக்காமல் அனுப்பும் கடிதங்களையும்
முகர்ந்துபார்க்கிறாய் நீ
மல்லிகையின் கமழும் நாற்றமும்
இதயப்பாலையில் நிர்வாணமுறுத்துகிறது என்னை
உணர்ச்சியின் பிளிறல் கிளப்பும் ஒளிக்கம்பத்தில்
சுழலும் கதிரெழு துகள்களினும்
உன் உருவத்தை எனக்குத் தரமறுத்தாய்
-குட்டிரேவதி
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »
Posted by mahendhiran மேல் நவம்பர் 17, 2007
இதழ்சிதையா செங்கழுநீர் மாலை
மார்பிலே தவழ்ந்திருக்க
வெந்நிறமான அகில்புகை
கூந்தலிலிருந்து மேலெழும்புகிறது
கரும்பும் வல்லியும் வரையப்பட்ட
அகன்ற தோள்கள்
சந்தனப் பூச்சினால் பளபளக்கின்றன.
உயர்ந்த இளங் கொங்கையின்மேல்
மெல்லிய பற்தடங்கள் அமிழ்கின்றன
பொற்கலத்தின் வெண்சாதத்தை
பிசைந்து அவள் ஊட்டுகிறாள்
மெருகேறிய கரும்பாறை முற்றத்தில்
குழந்தைகளிரண்டு விளையாடுகின்றன
தூரத்தில்
காமம் தீர்ந்த ஒருவன்
வனப்பழிந்து வந்து கொண்டிருக்கிறான்
நெருங்கியவன்
சவுக்குப் படலில் கையூன்றி
கண்களால் துழாவ
சிலம்புகள் ஏதுமற்ற அவள்கால்கள்
அவனைச் பரிகசிக்கின்றன
இரட்டைமுலைகள் அதிர
அவள் இதழ்களில் தெறிக்கிறது
ஊழிப்புன்னகை.
-சுகிர்தராணி
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »